"டாடா ஏஸ்" வாகனம் மீது மோதிய "ஹுண்டாய்" கார்... டீ குடித்து கொண்டிருந்த 2 பெண் ஒப்பந்த பணியாளர்கள் பலி
சென்னையில் கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். அதிகாலை 3 மணியளவில், பாடிகுப்பம் நெடுஞ்சாலை தடுப்பில் 15 ஒப்பந்த பணியாளர்கள் வண்ணம் தீட்டி கொண்டிருந்தனர்.
எதிர்திசையில் அதிவேகமாக வந்த ஹுண்டாய் கார், ஒப்பந்த தொழிலாளர்களின் டாடா ஏஸ் வாகனம் மீது மோதியது. டாடா ஏஸின் முன்புறம் நின்று டீ குடித்து கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்களில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரை அதிவேகமாக ஓட்டி வந்த இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் சுஜீத்தை போலீசார் கைது செய்தனர். அவர் தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி காரில் அதிவேகமாகச் சென்றதாகத் தெரிவித்த போலீசார் அவர் மது அருந்தவில்லை என்றனர்.
Comments